Зарегистрироваться
Восстановить пароль
FAQ по входу

ஜெயமோகன். காடு / Jeyamohan B. The Forest

  • Файл формата pdf
  • размером 2,60 МБ
  • Добавлен пользователем
  • Описание отредактировано
ஜ யம கன். க ட / Jeyamohan B. The Forest
Chennai: Kizhakku Pathippagam, 2017. — 474 p.
Б. Джеямохан. Лес, роман (на тамильск. яз.)
காடு ஜெயமோகன் எழுதிய ஐந்தாவது நாவல். இதை 2003-ல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. மழைக்கால இளவெயில்போல வாழ்க்கையில் அபூர்வமாக வந்து உடனேயே இல்லாமலாகும் முதற்காதலை இக்கதையில் சொல்லியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். இதன் இரண்டாவது பதிப்பு இப்போது கிடைக்கிறது. சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் (காண்டிராக்ட் வேலை) உருவாக்கத்தில் பங்கு பெற்ற கிரிதரன் என்ற வயோதிகன் நீண்ட நாட்கள் கழித்து தான் வேலை செய்த இடத்திற்குத் திரும்புகிறான். நெடுமங்காடு வனச்சாலை கேரளாவிற்குப் பிரியும் இந்த இடத்தில் தன்னுடைய பதின் பருவத்தில் நடந்த மனவோட்டங்களை நினைத்துப் பார்க்கும் கதை. தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் மலையாளம் கலந்த மருவிய மொழி நிறைய இடங்களில் வருகிறது. மலையாளமும் தமிழும் கலந்த மொழிதான் கதையின் ஆதார மொழி. கால வரிசை கூட ஒழுங்கில் இல்லாமல் வாழ்வின் முன்னுக்குப் பின் களைந்து சென்று, காட்டு வாழ்வு, இளமைக்காலம், தற்போதைய யதார்த்த வாழ்வு என்று பின்னிப் பிணைந்திருக்கிறது. ஜெய மோகனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்... "காடு என்பது, ஒவ்வொரு கணமும் புதியதாக மாறியபடியே இருக்கக்கூடிய ஓர் இடம்." காலையில், மாலையில், பகலில், இரவில், பனிப் பொழிவில், கன மழையில் என காடு அடையும் உருமாற்றம் விசித்ரம் நிறைந்தது. அதுபோலவே மனிதனின் காமமும், பெண் குறித்தான வேட்கையும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. காண்ட்ராக்ட் வேலைக்கு வரும் கிரிக்கு காட்டின் தனிமை ஏற்படுத்தும் காமவிழிப்பும், அதன் மூலம் அவனுக்கு ஏற்படும் மாற்றங்களும் தான் முழு நாவலாக விரிகிறது.
  • Чтобы скачать этот файл зарегистрируйтесь и/или войдите на сайт используя форму сверху.
  • Регистрация